வேலூர் பச்சை மலை முருகன் ஆலயத்தில் 108 சங்க அபிஷேகம்
நாமக்கல் பரமத்தி வேலூர் பச்சை மலை முருகன் ஆலயத்தில் கார்த்திகை மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேற்கு வண்ணான்துறை பச்சை மலையின் மீது அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு கார்த்திகை மாதம் 19.11.25 புதன்கிழமை விசாகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு அபிஷேகம், கலச அபிஷேகம் உடன் யாக கேள்விகள் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக காலை 10 மணியளவில் கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து பலவிதமான வாசனைதிரவியங்களால் அபிஷேகமும்,
108 வலம்புரி சங்காபிஷேகமும்
பின்னர் மகாதீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் நிகழ்வாக காலை யாக வேள்விகல் நடைபெற்று மகா பூர்ணகுதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் கலச அபிஷேகமும் முருகப்பெருமானுக்கு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நாமா வழிகள் கூறி உதிரிப்பூக்களினால் அர்ச்சனை செய்து மகாதீபாராதனை அடுத்தாரதி பஞ்சாரத்தி ஏகாரத்தியுடன் கும்பாரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பட்டினை பச்சைமலை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


