in

வரத அய்யனார் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

வரத அய்யனார் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

 

நாலுகோட்டை அருள்மிகு ஶ்ரீ பூர்ண புஷ்கலா அதிகுந்த வரத அய்யனார் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அதிகுந்த வரத அய்யனார் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மூலவர் அய்யனார் சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் காளியம்மனுக்கு மல்லிகை பூக்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபாடு செய்தனர்.

கோவில் வளாகம் முழுவதும் பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்களப் பொருட்களை வைத்து மஞ்சளில் விநாயகர் பிடித்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை துவங்கினர்.

விளக்கு பூஜையில் குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து 108 திருவிளக்கு போற்றி மந்திரங்கள் காயத்ரி மந்திரங்கள் கூறி பூஜை செய்தனர்.

இதில் கலந்து கொண்ட பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் நோய் நொடிகள் நீங்க வேண்டியும் திருமணத்தடை நீங்க வேண்டியும் புத்திர பாக்கியம் பெற வேண்டியும் அம்மனை நினைத்து கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

நிறைவாக திருவிளக்கிற்கு சர்க்கரைப் பொங்கல் நெய் வைத்தியம் செய்து கற்பூர ஆராத்தி காட்டி வழிபாடு செய்தனர் விழா நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விளக்கு பூஜை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

What do you think?

குயவனுடப்பு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை வழிபாடு

காதலிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ வழக்கில் கைது