யோகா தினத்தில் இவ்வருட கருப்பொருளை விளக்கும் வடிவில் யோகாசனம் செய்து அசத்தல்.
யோகா தினத்தில் சிறுவர்கள் ஒன்றிணைந்து யோகாசனம் செய்து அசத்தல்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.
பள்ளி சிறுவர்கள் ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம் என்ற இவ்வருட யோகா கருப்பொருளை விளக்கும் வடிவில் யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் யோகாசனம் செய்வதினால் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தை பற்றி மாணவர்களுக்கு விளக்கி உறுதிமொழி ஏற்றனர். மேலும் தொடர்ந்து மாணவர்கள் குழுக்களாக இணைந்து பல்வேறு வகையான யோகாக்களை செய்து அசத்தினர்.
இந்நிகழ்வு கழுகு பார்வையில் பதிவு செய்துள்ள காட்சி சமுக வளைதளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.