in

திருவாவடுதுறை ஸ்ரீ பிரஹன்னாயகி அம்மன் திருநடன பெருவிழா திரளான பக்தர்கள் விழாவை கண்டு களித்து வருகின்றனர்.

திருவாவடுதுறை ஸ்ரீ பிரஹன்னாயகி அம்மன் திருநடன பெருவிழா திரளான பக்தர்கள் விழாவை கண்டு களித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை வடக்கு மடவிளாகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ பிரஹன்னாயகி அம்மன் ஆலய 71 ஆம் ஆண்டு திருநடனப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று இரவு ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தது.

இன்று அதிகாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருநடனப் பெருவிழா கோயில் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிறந்த இடத்திற்கு சென்றது அதனைத் தொடர்ந்து வலியங்கும் கும்மியாட்டம் மகுடிஆட்டம் அம்மன்பாட்டு ஆகியவை நடைபெற்றது.

கீழ தெரு பிடாரியம்மன் கோயிலில் நிறைவு பெற்றது இந்தத் திருநடன நிகழ்ச்சியானது வருகிற 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது 27 ஆம் தேதி மதியம் கஞ்சிவாத்தல் நடைபெற்று அன்று மாலை அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

What do you think?

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி திமுக அமைப்பாளர் சிவா பேட்டி..