லண்டனில் 40% யூத் கிளப்புகள் மூடப்படும் அபாயம்!

 

கரோனா பெருந்தொற்றால் பிரிட்டன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வலுவான தாக்கம் காரணமாக லண்டனில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட யூத் கிளப்புகள் இன்னும் ஓராண்டுக்குள் மூடப்படுகின்றன.

லண்டன் யூத் என்ற அறக்கட்டளை சார்பில் லண்டனில் 120}க்கும் மேற்பட்ட கிளப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கிளப்புகளை நடத்துவதற்கான செலவை சந்திக்க வழியின்றி அவற்றை மூடப் போவதாக 43 சதவீத கிளப்புகள் தெரிவித்தன. அதிலும் 14 சதவீத கிளப்புகள் இன்னும் 3 மாதத்தில் மூடுவிழா காண இருக்கின்றன. கால் பங்குக்கும் அதிகமான கிளப்புகள், ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக தெரிவித்திருக்கின்றன.
கரோனா தொற்று இளைஞர்களின் வாழ்வாதாரத்தின் மீது ஏற்படுத்திய கடுமையான விளைவுகளையே இந்த ஆய்வு விளக்குகிறது.
ஏற்கெனவே, கரோனா பெருந்தொற்று ஏற்படும் முன்பாக லண்டனில் பெரும்பாலான யூத் கிளப்புகள் நிதி பற்றாக்குறையை சந்தித்து வந்த நிலையில், தற்போதைய இடர்பாடு அவர்களை கடுமையான இன்னல்களுக்கு உட்படுத்தியிருக்கிறது. எனவே, பிரிட்டன் அரசு தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, 500 மில்லியன் பவுண்ட் இளைஞர் முதலீட்டு நிதியை உடனடியாக விடுவித்து, யூத் கிளப் துறையை அழிவிலிருந்து மீட்க வேண்டுமென ஆய்வு நடத்திய லண்டன் யூத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்மேரி வாட் வியனஸ் கூறியது:
லண்டன் இளைஞர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுக்கும் இந்த ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக மாறிவிட்டது. மேலும், இளைஞர்களுக்கு உண்மையான உறவுகளும், ஆதரவும் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்த பெருந்தொற்று உணர்த்திவிட்டது. லண்டன் இளைஞர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாங்கள் வாழும் சமூகத்தில் உயர்தர இளைஞர் சேவையை எவ்வாறு சார்ந்திருக்கின்றனர் என்பது தான் முக்கியம் என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

five × four =