in

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது


Watch – YouTube Click

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது… 1 1/2 டன் ரேசன் அரிசி மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, உணவு கொடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், தென் மண்டல உணவு பொருள் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்ராஜன் தலைமையில், சிவகாசி – திருத்தங்கல் சாலையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, திருத்தங்கல் பாண்டியன் நகர் 1வது தெரு சாலையில் சந்தேகப்படும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேனை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 29 மூடைகளில் ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேஸ்வரன் (26) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கடத்தல் ரேசன் அரிசி மூடைகள், கடத்தலுக்கு பயன் படுத்திய மினி சரக்கு வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மினி வேன் ஓட்டுநர் மற்றும் 4 லோடு மேன்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு

விருதுநகர் நில அளவைத்துறை அலுவலகம் ஜப்தி செய்தது