தேவாலயத்தில் பெண்களுக்கும் அனுமதி

ஜெர்மனியில் ஆயிரம் ஆண்டுகால வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி

ஜெர்மனியின் ரேகன்ஸ்பர்க் நகரில் கத்தோலிக்க திருச்சபையில் ஆண்கள் மட்டுமே கொயரில் பாட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 985ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பழக்கம், நாளடைவில் வழக்கமாக மாறி 21ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டுகால வழக்கம் உடைக்கப்பட்டு முதன்முறையாக கொயர் பாட பெண்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான பயிற்சி தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டுமுதல் பெண்களும் தேவாலய கொயரில் இடம்பெறுகின்றன. திருவழிபாட்டு நேரத்திலும் அவர்கள் பாட இருப்பதாக தகவல் வெளியானது.

Add your comment

Your email address will not be published.

4 + seven =