பெண் போலீஸ் அதிகாரி படுகொலை

 

டோவர் அருகே ஸ்நோடவுன் அகோல்ட்வுட் பகுதியில் போலீஸ் கம்யூனிட்டி ஆதரவு பெண் அதிகாரி ஜூலியா ஜேம்ஸ் (53) வியாழக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவர் பராமரித்துவந்த ஜேக் ரஸ்ஸல் என்ற நாய் அவரது சடலம் அருகே சோகமாக நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து அவரது கணவர் வெயின் டேவிஸ் (62) கூறுகையில், ஜூலியா தான் என் வாழ்வின் மையம். ஆனாலும், எல்லா தம்பதிகளை போல் நாங்களும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம். ஒரு போலீஸ் அதிகாரியாக அவர் வெறும் சேவை மட்டுமன்றி, வாழ்வுக்கான வழியையும் காட்டிவிட்டு சென்றுவிட்டார் என உருக்கமாக தெரிவித்தார். இத்தம்பதிக்கு 23 வயதில் பாட்ரிக் என்ற மகனும் இருக்கிறார்.

இதுகுறித்து கொலை பிரிவின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர், அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என காவல் துறை தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

2 × one =