பிரிட்டனின் கவுண்டி ஆர்மாக் போர்டா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் லூயன்ஸ். இவர் பர்னிச்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆடை வடிவமைப்பாளராகவும் விற்பனை ஆலோசகர் ஆகவும் லூயன்ஸ் அந்த கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் இருந்த போது ஒரு நபர் அவரை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லூயஸ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து எம்பிளாய்மெண்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லூயன்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 19000 பவுண்டு அபராதம் விதித்தது.
மேலும் அந்த பணத்தை லுயான்சின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டது பாதிக்கப்பட்ட லூயன்சுக்கு வயது 60. அந்த பர்னிச்சர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings