பெற்ற பிள்ளையையே கடத்த முயன்ற தாய் கைது

பர்மிங்ஹாம் மருத்துவமனையில் பிறந்த 7 வார பெண் குழந்தையை கடத்தி, விற்க முயன்றதாக அதன் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பர்மிங்ஹாம் மருத்துவமனையில் கடந்த 7 வாரங்களுக்கு முன்பு 43 வயது பெண்ணுக்கு பிரசவமானது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திடம் சொல்லாமல், திடீரென குழந்தையுடன் அந்த பெண் மாயமானார். சுதாரித்துக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், இதுதொடர்பாக உள்ளூர் காவல் துறையில் புகார் அளித்தது. விசாரணையில், குழந்தையை விற்பனை செய்யும் நோக்கில், அதை அதன் தாயாரே கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அதன் தாயார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்களை காவல் துறை கைது செய்தது.

Add your comment

Your email address will not be published.

seventeen + 3 =