சீனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

 

 

சீன நாட்டின் சினோபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகாரம் அளிக்கப்படும் மேற்கத்திய நாடுகள் அல்லாத பிற நாட்டை சேர்ந்த முதல் தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா ஏற்கெனவே இதே தடுப்பூசியை அந்நாட்டை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு பயன்படுத்திவிட்டது. இதுதவிர 45 வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்கிறது.

இதுவரை பைஸர், அஸ்ட்ராஜெனிகா, ஜான்சன் அன்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய நான்கு நிறுவன தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்த நிலையில், இதில் சினோபார்ம் நிறுவனம் 5ஆவதாக இணைந்துள்ளது.

முன்னதாக, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சீன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

1 × 3 =