in

வீடுகள் மீது தெளிக்கப்பட்டிருந்த ரத்தம் மாந்திரீக வேலையா? பொதுமக்கள் அச்சம்

வீடுகள் மீது தெளிக்கப்பட்டிருந்த ரத்தம் மாந்திரீக வேலையா? பொதுமக்கள் அச்சம்

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உஜ்ஜிசாமி கோவில் தெருவில் வீடுகள் மீது ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி; மாந்திரீக வேலையா என பொதுமக்கள் அச்சம்

அருப்புக்கோட்டை உஜ்ஜிசாமி கோவில் 4 வது குறுக்குத் தெருவில் இன்று காலை வேளையில் அடுத்தடுத்த சில வீடுகள் மீதும் வெளியே வீட்டு வாசல்களிலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீதும், மரக்கிளைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரத்தம் தெளிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து உடனடியாக பொதுமக்கள் நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி ரத்த மாதிரிகளை சேகரித்தனர். மேலும் அப்பகுதிகள் தெளிக்கப்பட்டு இருந்தது மனித ரத்தமாக இல்லை கோழி உள்ளிட்ட விலங்குகளின் ரத்தமா யார் இந்த வேலையை செய்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பகுதி பொதுமக்கள் இது மாந்திரீக வேலையாக இருக்குமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.

What do you think?

ராஜபாளையத்தில் யானைத் தந்தங்கள் கடத்த முயற்சி 10 பேர் மீது வழக்குப்பதிவு

சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்