குடோனில் பயங்கர தீ விபத்து

 

பிரட்போர்ட் நகரில் உள்ள 3 மாடி குடோன் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3 மாடிகளைக் கொண்ட அந்த அறைகலன் குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் திடீரென கரும்புகை கிளம்பியது. தொடர்ந்து, தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்த உள்ளூர் தீயணைப்பு படைவீரர்கள் 18 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்த பிளாட்டுகளில் வசிக்கும் சுமார் 30 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டின் கதவையும், ஜன்னல்களையும் பூட்டி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தீ விபத்து காரணமாக அப்பகுதியில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் சீரமைப்பு பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில், பிரைமரி பள்ளிக்கூடம் ஒன்றும் சேதமடைந்ததால், அந்த பள்ளி புதன்கிழமை மட்டும் மூடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக அப்பகுதி சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

4 × five =