வெளிநாட்டு பயணத்தை தவிர்க்கவும்

 

வேல்ஸ் மக்களுக்கு வேண்டுகோள்

 

வேல்ஸ் மாகாண மக்கள் இந்த ஆண்டு முழுவதும் வெளிநாட்டு பயணத்தை தவிர்க்குமாறு அம்மாகாண அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வேல்ஸ் அமைச்சர் மார்க் டிரேக்போர்ட் கூறுகையில், மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய தேவையிருந்தால் மட்டும் வேல்ஸ் மக்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். முடிந்தவரையில், வெளிநாட்டுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றார்.

வேல்ஸ் மாகாணம் கரோனா இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பை அமைச்சர் மார்க், வரும் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் திரும்ப பெறப்பட்டு மீண்டும் திங்கள்கிழமை முதல் பொது முடக்கம் கடுமையாக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

6 + 3 =