10 மாதங்கள் கழித்து கோமாவிலிருந்து மீண்ட இத்தாலி பெண்!

இத்தாலியை சேர்ந்த 37 வயது பெண் கிறிஸ்டினா ரோஷி. இவர் கடந்த ஆண்டு ஜூலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் ஆனது. பின்னர், மூளை காய்ச்சல் காரணமாக கோமாவுக்கு சென்ற அவர், 10 மாதங்கள் கழித்து அதிலிருந்து மீண்டிருக்கிறார். அவர் நினைவுதிரும்பியதும் முதன்முறையாக அவரது அம்மாவை தேடியதாக, ரோஷியின் கணவர் காபிரியேல் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

16 − 8 =