இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரிஸ்டோல் மாணவர்!

பிரிட்டனின் பிரிஸ்டோல் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வருபவர் சச்செத் சதுர்வேதி. டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு, பிரிஸ்டோலில் உள்ள மூன்று பல்கலைக்கழகத்தில் பயிலும் தன்னார்வலர்களின் உதவியுடன் 2,600 பவுண்ட் நிதி திரட்டி, 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி, அவற்றை இந்தியாவுக்கு அனுப்பி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதற்காக இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக தன்னார்வலர்களும் தனக்கு உதவுவதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும், கூடிய விரைவில் இங்கிலாந்தில் 16 ஆயிரம் பவுண்ட் திரட்டி, குறைந்தது 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளாவது தனது தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் சதுர்வேதி தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

17 + sixteen =