ரஷ்யாவில் உணவு டெலிவரி நிறுவன விளம்பரத்துக்கு எதிர்ப்பு

ரஷ்யாவில் செயல்பட்டுவரும் பிரபல உணவு டெலிவரி நிறுவனம் விகுஸ் வில். இதன் ஆன்லைன் விளம்பரத்தில் ஓரினச்சேர்க்கை குடும்பத்தினர் இடம்பெற்றிருந்தனர். மேலும், குடும்பங்களின் மகிழ்ச்சிக்கான உணவு வகைகள் என அதில் வாசகமும் இடம்பிடித்திருந்தது. ஆன்லைன் விளம்பரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இடம்பெற்றது ரஷ்யாவில் சர்ச்சையை கிளப்பியது. இதனால், ஏராளமானோர் அந்நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். இதையடுத்து அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. ரஷ்யாவில் ஓரினசேர்க்கையை தூண்டும் எந்தவித கருத்துகளுக்கும், படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × 4 =