மருத்துவமனையில் விராட் கோலி பாதுகாப்பை அதிகரிக்கும் காரணம் என்ன?

விராட் கோலி தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மா- விராட் கோலி தம்பதிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதியன்று மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் தங்கள் பச்சிளம் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

மும்பை: விராட் கோலி தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மா- விராட் கோலி தம்பதிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதியன்று மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் தங்கள் பச்சிளம் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்

அனுஷ்காவும் (Anushka Sharma) விராட்டும் தங்கள் குழந்தையை மருத்துவமனையில் யாரும் பார்க்க அனுமதிக்காத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அனுஷ்காவுக்கு குழந்தை பிறந்த உடனே, விராட் கோலி அதை தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அழகான தம்பதிகளில் குட்டி தேவதையை காண நெட்டிசன்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இருப்பினும், அனுஷ்கா மற்றும் விராட் (Virat Kohli) தங்களது பிறந்த குழந்தையைப் பற்றிய புகைப்படத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதற்கு நீண்ட காலம் ஆகலாம்.
தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு அனுஷ்காவோ, விராட்டோ எப்போதுமே தயங்கியதில்லை. ஆனால், எதை வெளியிட வேண்டும், எதை தாமதமாக வெளியிடலாம் என்பதை அவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்?

இதை அவர்கள் தங்கள் திருமண விவகாரத்தில் நிரூபித்தனர். அவர்கள் தங்கள் திருமண செய்தியை ரகசியமாக வைத்திருந்தனர். அதேபோல், அனுஷ்காவின் கர்ப்பமான செய்தியையும் அவர்களே தான் வெளியிட்டனர். தற்போது அனுஷ்கா ஷர்மாவும், குழந்தையும் இருக்கும் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் பாதுகாப்பு ( Security ) பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனுஷ்கா மற்றும் விராட் தம்பதிகளின் நெருங்கிய உறவினர்கள் கூட மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  மருத்துவமனையிலேயே அனுஷ்காவின் அறைக்கு அருகிலுள்ள அறைகளில் உள்ளவர்கள் கூட குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படாத அளவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தங்கள் உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோரிடமிருந்து குழந்தைக்காக எந்தவொரு பரிசையும் இந்த ஜோடி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் தங்களுடைய தனியுரிமையைப் பாதுகாக்க, விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் தங்கள் மகளின் படத்தைக் எடுக்க வேண்டாம் என்று பாப்பராசிகளிடம் (paparazzi) வேண்டுகோள் விடுத்தனர்.