கொலம்பியாவில் வன்முறைக்கு 14 பேர் பலி

விசாரணையை தொடங்கியது ஐ.நா.

கொலம்பியாவில் காவல் துறையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவரக் கோரியும் அதிபர் இவான் டியூக்கை கண்டித்து பொதுமக்கள் காலி நகரில் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 14 பேர் பலியாகியிருப்பதாகவும், 54 பேருக்கு துப்பாக்கி குண்டு தாக்குதல் உள்பட 98 பேர் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வன்முறை குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. வன்முறைக்கு காரணமான அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிச்செல்லி பச்லெட் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

fourteen + sixteen =