கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முந்துகிறார் விஜய் வசந்த்

 

 

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வசந்தகுமாரின் மறைவைத் தொடர்ந்து, கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுடன் இணைத்து, இதற்கும் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில், 9.30 மணி வரையிலான நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

five × two =