in

எம்பி கதிர் ஆனந்த் பேச்சுக்கு பெண்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் நாதக வேட்பாளர் கார்த்திகா


Watch – YouTube Click

எம்பி கதிர் ஆனந்த் பேச்சுக்கு பெண்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் நாதக வேட்பாளர் கார்த்திகா

 

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா பிரதாபராமபுரம் பகுதியில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் மாநில மகளிர் பாசறை செயலாளர் அஞ்சம்மாள் உள்ளிட்டோருடன் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள தென்னை, மா, முந்திரி, நிலக்கடலை விவசாயிகளை நேரில் சந்தித்து விவசாயிகளுடன் சேர்த்து முந்திரி பழங்களை பறித்தும் நிலக்கடலை காயவைத்தும் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

கடற்கரை மணலில் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து சென்று அவர்களின் பிரச்சனைகளை குறித்து கேட்டறிந்தார். தற்போது முந்திரி ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நிலக்கடலை பயிருக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேட்பாளர் கார்த்திகாவிடம் வேதனை தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய வேட்பாளர் கார்த்திகா விளைவிக்கப்படும் பயிர்களுக்கு மதிப்பு கூட்டும் தொழில் முறை கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு லாபம் மும்மடங்கு அதிகரிக்கும் என்றும் தான் வெற்றி பெற்றால் இப்பகுதியில் முந்திரியில் இருந்து ஒயின் தயாரிப்பு தொழிற்சாலையும், கச்சத்தீவு போல் 40 ஆண்டு கால அனைத்து கட்சிகளின் ஜெராக்ஸ் வாக்குறுதியாக இருக்கும் மாம்பழக் கூழ் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வேட்பாளர் கார்த்திகா : நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் அவருக்கு உரிய பதிலடியை கொடுப்பார்கள் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

வாய்க்கால் கட்டும் பணியும் போது மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து தமிழக தொழிலாளர் 3 பேர் பலி..

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து