in

கடலூர் சில்வர் பீச்சில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்


Watch – YouTube Click

கடலூர் சில்வர் பீச்சில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்

 

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை என்ற மையக் கருத்தை வலியுறுத்தி கடலூர் சில்வர் பீச்சில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் திரு.இராஜாராம் இணைந்து பார்வையிட்டனர்.

பின்னர் வாக்களிப்பது நமது கடமை என்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு கடலூர் சில்வர் பீச்சில் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிதம் வாக்களிப்பது நமது கடமை என்றும் அது நமது உரிமை என்றும் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம் வெகு அழகாக காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அவர்களும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜாராம் அவர்களும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை இணைந்து தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகள் மத்தியில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் ஜாதி மொழி மதங்களால் பிரியாமல் இருப்போம் 100 சதவிதம் வாக்களிப்பது நமது கடமை என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் DRO ராஜசேகரன் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைதுறை கோமதி கிராமபுற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் K. ஸ்ருதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பவானி அமீர் திருமணம் விரைவில்… அமீரையும் திருமணம் செய்து கொன்று விடுவிர்களா?…

தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை