in ,

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே 63 ரன்களில் அபார வெற்றி


Watch – YouTube Click

சிஎஸ்கே 63 ரன்களில் அபார வெற்றி

ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கி குஜராத் அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா 46 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து களத்தில் இருந்த ருதுராஜ் அதிரடி காட்ட தொடங்கிய, சிறுது நேரத்திலேயே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களத்தில் இருந்த சிவம் டுபே, குஜராத் அணி பந்து வீச்சை நான்கு பக்கமும் போலந்து கட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். அட்டகாசமாக விளையாடிய சிவம் டுபே தனது அரை சதத்தை வெறும் 22 பந்துகளில் கடந்தார். அவர் அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே ரஷீத் கானிடம் ஆட்டமிழந்தார்.

இறுதியில், சிஎஸ்கே அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அதன் பின் 207 ரன்கள் எடுத்தால் 2-வது வெற்றியை பெறலாம் என்று களமிறங்கியது குஜராத் அணி. குஜராத் அணியின் தொடக்க வீரரும், அணியின் கேப்டனும் ஆன சுப்மன் கில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். குஜராத் அணியில் தொடர்ந்து விளையாடிய எந்த ஒரு வீரரும் பொறுப்புடன் விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி கொண்டிருந்தனர்.

குஜராத் அணியின் பேட்ஸ்மேனும், தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் மட்டும் தனியா நின்று ஒரு முனையில் ரன்களை எடுக்க போராடி கொண்டிருந்தார். அதிரடி வீரர் டேவிட் மில்லரும் துரதிஷ்டவசமாக ரஹானேவின் அட்டகாசமான கேட்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குஜராத் அணிக்கு தூணாக நின்று பேட்டிங் செய்த சாய் சுதர்சனும் பத்திரனாவின் பந்தில் விக்கெட்டை இழந்தார். மேலும், குஜராத் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விலவும் சென்னை அணியின் வெற்றி உறுதியானது.

இறுதியில், குஜராத் அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்களில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துக்கு 37 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு மறைவு