in

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தி நடிகை அனுஷ்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே வாமிகா என்ற ஒரு பெண் குழந்தை உண்டு தற்பொழுது இவர்களுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இதுவரை இது பற்றி வெளிப்படையாக கூறாத விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.

இருப்பினும் விராட் கோலியின் நண்பரும் தென்னாபிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரருமான டி வில்லியர்ஸ் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதால் அவருடன் கூடுதல் நேரத்தை செலவிடுவதாக தான் அவர் இந்த தொடரில் விளையாடவில்லை என்ற ரகசியத்தை வெளியிட்டார்.

தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை சமூக வலைதளம் மூலம் விராட் கோலி நேற்று அறிவித்தார். எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் இதயங்களில் அன்புடனும் கடந்த 15ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் குழந்தைக்கு அகாய் என்று பெயர் சூட்டி வாமிகாவின் குட்டி சகோதரனை இந்த உலகத்திற்கு நாங்கள் வரவேற்கிறோம்.

எங்கள் வாழ்வின் அழகான இந்த தருணத்தில் உங்கள் அனைவரின் ஆசியும் வாழ்த்துக்களையும் எதிர்பார்க்கின்றோம் அதே நேரத்தில் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்கும் படியும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்களும் சினிமா நட்சத்திரங்களும் மற்றும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியும் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள்.

What do you think?

துணிவு பட நடிகர் மரணம்

பிரபல வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது