in

பாகிஸ்தானுக்கு சீனா கடன் உதவி


Watch – YouTube Click

பாகிஸ்தானுக்கு சீனா கடன் உதவி

பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடனை சீனா வழங்கியுள்ளது என்று பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டில் நிதி அமைச்சர் ஷம்ஷாத் அக்தர் உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்கைள் 90க்கும் மேற்பட்ட இடங்களையும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 75 இடங்களையும், பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் கைப்பற்றின.

இதனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. PML-N தலைவர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும், அதே நேரத்தில் PPP இணைத் தலைவர் ஆசிப் ஜர்தாரி அதிபராக பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடனை சீனா வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் ஷம்ஷாத் அக்தர் உறுதிப்படுத்தினார். அண்டை நாடான சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பல்வேறு கடன் உதவிகளை பெற்று வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

சமீப கலகமாக பாகிஸ்தான் பொருளாதாரம் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டாலர் காத்திருப்பு ஏற்பாட்டைப் பெற்றது. தற்போது, பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடனை சீனா வழங்கியுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட டெப்பாசிட் பெறாது

பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய அறிவியல் செயல்திட்ட மாதிரி கண்காட்சி