in ,

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | Britain Tamil Europe News | UK News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்

மாஸ்கோவில் பலர் உயிரை காப்பாற்றிய பள்ளி மாணவர்களுக்கு மெடல்

மாஸ்கோவில் இசையரங்கில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் சம்பவத்தின் போது பலரது உயிரை இரண்டு பள்ளி மாணவர்கள் காப்பாற்றியது தெரியவந்துள்ளது.

இஸ்லாம், ஆர்டிஓம் ஆகிய அந்த இருவர்களின் வீர தீர செயலை பாராட்டி கடந்த திங்கள்கிழமை மெடல் வழங்கப்பட்டது.

 

பிரிட்டன் எம்பி.களின் ரகசிய தகவல்களை திருடிய சீனா

பிரிட்டன் எம்பிக்களின் ரகசிய தகவல்களை சீனா ரகசியமான முறையில் ஹேக் செய்து திருடியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. இதே போல பிரிட்டன் தேர்தல் கமிஷனின் தகவல்களையும் சீன நிறுவனம் உணவு பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்தில் உள்ள சீன தூதரகம் மறுத்துவிட்டது.

 

என் புருஷனுக்கு வைத்தியம் பார்த்தே கடனாளி ஆகிவிட்டேன்

பிரபல பெண் பத்திரிகையாளர் ஆதங்கம்

தனது புருஷனுக்கு வைத்தியம் பார்த்து கடனாளியாகிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த பிரபல பெண் பத்திரிக்கையாளர் கேட் கர்ராவே தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிர் இழந்தார். அப்போது அவரை மருத்துவமனையில் வைத்து கவனிப்பதற்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவிட்டதாகவும் இதனால் கடன் அதிகரித்து விட்டதாக வும் பிரபல பெண் பத்திரிக்கையாளர்
கேட் கர்ராவே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு கணவரின் மருத்துவத்துக்கு கணக்கு பார்த்ததை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

இங்கிலாந்தில் வீடு விலை தாறுமாறாக உயர்வதால் அல்லல்படும் மக்கள்

இங்கிலாந்தில் வீடுகளின் விலை சமீப நாட்களாக விண்ணை மட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் டேவான் பகுதியைச் சேர்ந்த சார்லோட் சேசிரி என்ற பெண் தனது 16 மாத குழந்தையை வைத்துக் கொண்டு கடந்த ஐந்து மாதத்தில் ஆறு வீடுகளை காலி செய்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டேவான் கவுன்சில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வீடு வழங்க முன்வர வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

 

இங்கிலாந்தில் கடற்கரையில் பலத்த காற்று

இங்கிலாந்தில் நார்த் அம்பர்லாந்து உள்ளிட்ட கடற்கரைகளில் கடற்காற்று தீவிரமாக வீசி வருகிறது. இதனால் கடலில் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எலும்புகின்றன. இதனால் கடற்கரையோரம் உள்ள இருக்கைகள் சேதம் அடைந்து விட்டன. இது போன்ற சூழலில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இணையத்தில் வைரலாகும் தோனி கேட்ச்

பாஜகவினர் வெற்றி பெற போவதே இல்லை