in

நடிகர் ரஜினிகாந்த் திரை துறையில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை…பலர் வாழ்கையில் ஒளி ஏற்றி ஜொலிக்கும் ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்த் திரை துறையில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை…பலர் வாழ்கையில் ஒளி ஏற்றி ஜொலிக்கும் ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்த் திரை துறையில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை…பலர் வாழ்கையில் ஒளி ஏற்றி ஜொலிக்கும் ஸ்டார்.அவர் பலருக்கு உதவி செய்திருந்தாலும் அண்மையில் தன் சக நடிகருக்கு அவர் செய்தது உதவி அல்ல மறு ஜென்மமே கொடுத்திருக்கிறார்.ஓர் சிறு வேடத்தில் பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் அறிமுகமானவர், அதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்தவர், ரம்பாவுடன் சுந்தர புருஷன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அந்த படம் செம்ம போடு போட்டது, தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தவர், அஜித்குமார் நடிப்பில் வெளியான கன்னி ராசி என்ற படத்திற்கு திரை கதை எழுதினார்.அதன் பிறகு சில திரைபடங்களையும் இயக்கினார்.சரியான வாய்ப்பு கிடைக்காததால், சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார், இவரின் மகள் ஜோவிடா சன்டிவி யில் ஒளிபரப்பாகி வரும் அருவி என்ற சீரியலில் நடிக்கிறார். லிவிங்ஸ்டன் தற்போது லால் சலாம் என்ற படத்தில் ரஜினிகாந்துக்கு நண்பனாக நடித்தார்.

அந்த சமயத்தில் லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸி இருதயராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது . மனைவியின் மருத்துவ செலவுக்காக சிரமப்பட்ட அவருக்கு ஏற்கனவே நிறைய கடன்கள் இருந்ததால் ரொம்பவே கஷ்டபட்டாராம் இந்த விஷயத்தை லால் சலாம் ஷூடிங்கில் தன் நண்பர்களிடம் கூறினாராம் லிவிங்ஸ்டன் இத்தனை எப்படியோ அறிந்த ரஜினிகாந்த் யாரும் அறியாமல் லிவிங்ஸ்டனிடம் 15 லட்ச ரூபாயை கொடுத்து உடனே மனைவிக்கு மருத்துவ, சிகிச்சை கொடு என்றாராம். ஏற்கனவே நிறைய கடன் இருபதால் என்னால் இதனை திரும்ப அடைக்க முடியாது என்று கூறிய லிவிங்ஸ்டனை இடை மறித்து நான் ஒரு அண்ணனாக நினைத்து தான் கொடுக்கிறேன் கடனாக அல்ல என்று பணத்தை கையில் திணித்தாராம்.

பின்னர் தான் லிவிங்ஸ்டனுக்கே விஷயம் தெரிந்ததாம். ரஜினி இப்படி பல பேருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் என்று … இச்சம்பவம் குறித்து லிவிங்ஸ்டன் தன் சமிபத்திய பேட்டியில் கூறியதாவது…..என் வீட்டு பூஜை அறையில் ரஜினி சார் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறேன். என் பிள்ளைகள் கூட நம் அம்மா இன்று இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான் என மகிழ்ச்சியாக கூறுவார்கள்

What do you think?

இந்திய நாடாளுமன்ற தேர்தல் – 2024 முக்கிய அம்சங்கள் | Indian Parliamentary Elections-2024

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பா மீது போக்சோ வழக்கு