அநுத்தமா என்ற ராஜேஸ்வரி!!! காலம் சென்ற எழுத்தாளர் அநுத்தமா என்ற ராஜேஸ்வரி, காஞ்சி மகாசுவாமிகளின் பக்தை. பத்மநாபனை 12 வயதிலேயே கரம் பிடித்தவர். மாமனார் தன் மகளாகக் கருதி பாசம் காட்டினார். மருமகள் எழுதத் தொடங்கிய போது ஆதரவு கொடுத்தவர் மாமனார் தான். ‘அநுத்தமா’ என பெயர் சூட்டியவரும் அவரே. லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் அநுத்தமா என்பதும் ஒன்று. மாமனாரிடம் கல்வி கற்ற அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் காலமான போது, சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்தியது. அதில் தி.ஜானகிராமனின் ரசிகர்களான ஆங்கிலேயர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது சி.சு.செல்லப்பா,