கனடாவில் விக்டோரியா மகாராணி சிலை தகர்ப்பு

கனடாவில் செயல்படாமல் பாழடைந்த நிலையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் சடலங்கள் மீடகப்பட்டது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்டித்து, ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மானிடோபா மாகாண தலைநகர் வின்னிபெக்கில் உள்ள சட்டசபை வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த விக்டோரியா மகாராணி சிலையை போராட்டக்காரர்கள் தகர்த்தெறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், இதன் அருகிலேயே அமைக்கப்பட்ட இளவரசி 2ஆம் எலிசெபத்தின் சிலை தப்பியது.

Add your comment

Your email address will not be published.

seventeen − 12 =