44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் 44 வயதினருக்கும் திங்கள்கிழமை முதல் (ஏப்ரல் 26) கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முன்னதாக 45} 49 வயது வரையிலான மக்கள்தொகையில், மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு முதல் தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 40}43 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரையறை, தடுப்பூசி விநியோகத்தை பொறுத்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுகாதார சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் 44 வயதினர் 5 லட்சம் பேருக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை 4,98,430 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 1,42,215 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 4 கோடியே 63 லட்சம் பேர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அதில் 3.36 கோடி முதல் தவணையும், 1.26 கோடி பேர் இருதவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆவர்.

Add your comment

Your email address will not be published.

seventeen − 5 =