இங்கிலாந்தில் 38- 39 வயதினருக்கு தடுப்பூசி

 

இங்கிலாந்தில் 38- 39 வயதினர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் இங்கிலாந்தில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக 38- 39 வயதினரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருமாறு சுகாதாரத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக இந்த வயதினருக்கு செல்போன் வாயிலாக எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர்கள் வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான லிங்க்கும் குறுஞ்செய்தியுடன் அனுப்பப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் இளம் வயதினருக்கு ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், கர்ப்பிணிகளுக்கு பைஸர் அல்லது மாடர்னா தடுப்பூசி செலுத்துமாறு செவிலியர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இங்கிலாந்தில் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் நான்கில் மூன்று பங்கினருக்கு ஒரு தவணை தடுப்பூசியும், பெரியவர்களில் மூன்று பங்கினருக்கு இரு தவணை தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

five × 5 =