இங்கிலாந்தில் 32-33 வயதினருக்கு கரோனா தடுப்பூசி

 

இங்கிலாந்தில் 32-33 வயதினர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 32-33 வயதினர் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சனிக்கிழமை காலை 7 மணிமுதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய சுகாதார சேவைகள் ஆணையகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையொட்டி, 33 வயதினருக்கு சனிக்கிழமையும், 32 வயதினருக்கு திங்கள்கிழமையும் செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. பிரிட்டனில் இதுவரை 3 கோடியே 75 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2 கோடியே 16 லட்சம் பேருக்கு இருதவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இங்கிலாந்தை தவிர பிற நாடுகளில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிது. ஸ்காட்லாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், வேல்ஸ் மாகாணத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், வட அயர்லாந்தில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

five × four =