தடுப்பூசி பற்றாக்குறை

 

கிராமப்புறங்களுக்கு படையெடுக்கும் பெங்களூரு இளைஞர்கள்

 

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், அண்டை மாவட்டங்களை நோக்கி இளைஞர்கள் படையெடுக்கின்றனர். இதனால், கிராமப்புறங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

 

கர்நாடகத்தில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் போதிய தடுப்பூசி கிடைக்காததால், கோவின் என்ற இணையதளம் மூலம் இளைஞர்கள் கிராமப்புறங்களை தேர்வு செய்து, அங்கு படையெடுக்கின்றனர்.

இதனால், பெங்களூருவை சுற்றியுள்ள சிக்கபல்லாபூர், ராம்நகர், தும்குரு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக ஊரகப் பகுதி மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

fifteen − one =