டெல்லியில் அடுத்த 6 நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு

 

 

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

 

தலைநகர் டெல்லியில் அடுத்த 5 முதல் 6 நாள்களுக்கு மட்டுமே தேவையான தடுப்பூசிகள் இருப்பில் இருப்பதாகவும், கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கோரி இருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதேபோல், கரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெல்லியில் அடுத்த 5} 6 நாள்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆகையால், டெல்லிக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். குர்காவ், நொய்டா, பரிதாபாத், சோனிபேட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தினமும் டெல்லி வருகின்றனர்.

இப்போது தடுப்பூசி தட்டுப்பாடு என்னும் இடர்பாட்டை நாம் எதிர்கொள்கிறோம். போதுமான தடுப்பூசிகள் கிடைத்தால், நான் திரும்ப திரும்ப சொல்கிறபடி, டெல்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி கிடைக்க செய்துவிடலாம் என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் சனிக்கிழமை 1,14,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

six − 3 =