தடுப்பூசி பற்றாக்குறை : பல்கலைக்கழக மாணவர்கள் ஏமாற்றம்

இங்கிலாந்தில் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மே 18 முதல் மே 24ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லாததால், அன்றைய தினம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

தொடர்ந்து, மறுநாளும் (புதன்கிழமை) 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நீடிப்பதால், இந்த முகாமையே ரத்து செய்வதாக பல்கலைக்கழக வலைதளத்தில் தகவல் வெளியானது. இதனால், சுமார் 8 மணிநேரமாக கால்கடுக்க வெயிலில் நின்று நொந்துபோன மாணவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Add your comment

Your email address will not be published.

2 × 1 =