பிரிட்டனில் பெரியவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

பிரிட்டனில் பெரியவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பிரிட்டனில் இதுவரை அந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. எனவே தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, பிரிட்டனில் 18 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் மூன்றாம் டோஸ் எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி மற்றும் நோயெதிர்ப்பு இணை குழுவின் துணைத்தலைவர் ஆண்டனி ஹார்ன்டென் இந்த தகவலை தெரிவித்தார். பிரிட்டனில் ஏற்கனவே 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.