சிறுவர்களுக்கும் கரோனா தடுப்பூசி

ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் விண்ணப்பம்

ஐரோப்பிய நாடுகளில் 12 முதல் 15 வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் (ஈஎம்ஏ) பைசர், பயோ-என்-டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

ஐரோப்பாவில் 2000க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இதற்கு விண்ணப்பிப்பதாகவும், ஆய்வின் முடிவில் சிறுவர்கள் பாதுகாப்பாகவும், தடுப்பூசி திறம்பட வினைபுரிவதும் தெரியவந்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தடுப்பூசியை பெற்றுக் கொண்ட சிறுவர்கள் நீண்ட காலத்துக்கு கண்காணிக்கப்படுவர் என்று தெரிவித்த அந்நிறுவனங்கள், தடுப்பூசிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறியருக்கிறது.
இதற்கு வரவேற்பு தெரிவித்த ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ஜென் ஸ்பான், தடுப்பூசி திட்டத்தை வளரிளம் பருவத்தினருக்கும் நீட்டித்தால், ஐரோப்பாவில் எண்ணற்ற சிறுவர்கள் முதல் தவணை தடுப்பூசியை பெறுவர் என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பியாவில் 27 நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதலை முதன்முதலாக ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்நிறுவனங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

seventeen − twelve =