இங்கிலாந்தில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வாரத்தில் தடுப்பூசி

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்த நிலையில், இங்கிலாந்தில் இந்தியவகை கரோனாவை தீவிரமாக எதிர்கொள்ளும் பொருட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

தற்போது 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பபூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த சில தினங்களில் 30 வயதுக்கு உள்பட்டோருக்கும், அதன்பின்னர் 20 வயதுக்கு கீழானோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் மாத் ஹான்காக் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 7,50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலக அளவில் கரோனாவுக்கு 3 கோடியே 47 லட்சம் பேர் பலியாகியிருக்கின்றனர். இதில், 8.6 சதவீதத்துடன் 3 லட்சம் பேரை இழந்து இந்தியா 3ஆம் இடம் வகிக்கிறது.

Add your comment

Your email address will not be published.

15 + sixteen =