அயர்லாந்தில் 25 முதல் 29 வயதினருக்கு தடுப்பூசி

வடக்கு அயர்லாந்தில் அடுத்தகட்டமாக 25 முதல் 29 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதையொட்டி, சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் குறிப்பிட்ட அளவே தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும், வாரத்துக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வடக்கு அயர்லாந்தில் கடந்த வாரம் வரையிலான நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ராபின் ஸ்வான் கூறுகையில், இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைக்கு அயர்லாந்தில் மக்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்றார். மேலும், அயர்லாந்தில் அடுத்தவாரம் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

thirteen + one =