இந்தியாவில் அடுத்தகட்ட தடுப்பூசி திட்டம்

பற்றாக்குறைக்கு மத்தியிலும் தொடக்கம்

இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதை செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. ஆனாலும், பெரும்பாலான மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசி சப்ளை இல்லாததால், இத்திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனால் உயிரிழந்துவரும் சூழலில், தடுப்பூசி திட்டம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரிவுபடுத்தப்பட்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்ஷின், கோவிஷீல்டு என இருவகை தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட 1 கோடியே 30 லட்சம் பேர் தடுப்பூசியை பெற ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். எனினும்,பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும், போதிய அளவில் சப்ளை இல்லாததாலும், இத்திட்டத்தை மே 1இல் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என அறிவிப்பு வெளியானது.
இந்தியாவில் கரோனாவால் மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி அல்லோலப்படும் தலைநகர் டெல்லியில், தடுப்பூசி கோரி யாரும் வரிசைகட்டி நிற்க வேண்டாம். போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் சப்ளை செய்யப்பட்டதும் அனைவருக்கும் தெரியப்படுத்தி, செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துவிட்டார். இதேபோல், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், கரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

10 + 16 =