பிரிட்டனில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த சில தினங்களில் தடுப்பூசி

 

பிரிட்டனில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த சில தினங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பிரிட்டன் அரசு பைஸர் நிறுவனத்திடம் ஆர்டர் செய்திருந்த 4 கோடி தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டதும், அடுத்த வார இறுதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தேசிய சுகாதார சேவை (என்எச்எஸ்) தெரிவித்துள்ளது.
மேலும், பிரிட்டன் ஆர்டர் செய்த தடுப்பூசிகளை விட இரண்டு மடங்கு தடுப்பூசிகளை பெற திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு கிடைத்தால், கூடுதல் தடுப்பூசிகள் இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Add your comment

Your email address will not be published.

five × one =