வெளிநாடு செல்ல விரும்பினால் பொது அறிவை பயன்படுத்துங்கள்

பிரிட்டனில் கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதால், கடந்த ஓராண்டு காலமாக வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள் விடுமுறையை இன்பமாக கழிக்க வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதனால், விமான நிலையங்கலில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதன்மூலம் கரோனா அடுத்த அலை எழுந்துவிடுமோ என்கிற அச்ச உணர்வு மேலோங்குகிறது.

இந்தநிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது;
வெளிநாடுகளுக்கு செல்வதாக இருந்தால், உங்கள் பொது அறிவை சற்று பயன்படுத்தி யோசித்து பாருங்கள். இந்தியவகை கரோனா பரவல் காரணமாக மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு அசாதாரண சூழலில் மட்டும் செல்லலாம். பயணிகள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்யும் வகையில், எங்களால் ஒருநாளைக்கு 10,000 பேரிடம் மட்டுமே சோதனை மேற்கொள்ள இயலும்.
இங்கிலாந்து பொதுமுடக்க தளர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வேளையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை எங்களால் நிர்பந்திக்க இயலாது என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

5 × 4 =