அமெரிக்கா- ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

அமெரிக்க அதிபர் ஜோபிடனும், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினும் நேற்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் முதன்முறையாக சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்ட நேரத்தை விட குறைவாக சுமார் 3 மணிநேரம் நீடித்தது. அப்போது பாரம்பரியமிக்க சன் கண் கண்ணாடியையும், காட்டெருமை படிக சிற்பத்தையும் ரஷ்ய அதிபருக்கு ஜோபிடன் அன்பளிப்பாக அளித்தார்.
மேலும், இருநாடுகளுக்கும் இடையே சைபர் பாதுகாப்பு, உக்ரைன் விவகாரம் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது சிறையில் வாடும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஷி நவால்னி குறித்தும் இந்த சந்திப்பின்போது இருதலைவர்களும் காரசாரமாக விவாதித்ததாக தகவல் வெளியானது.
பின்னர் ரஷ்ய அதிபர் புதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜோபிடன் அனுபவம்வாய்ந்த ஆளுமை. நாங்கள் இருவரும் ஒரே தொனியில் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம் என்றார். அமெரிக்க அதிபர் ஜோபிடன் கூறும்போது, பேச்சுவார்த்தையை மேற்கொண்டு நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவுடனான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நேர்மையான காரணங்கள் இருக்கின்றன என்றார்.
சர்வதேச அளவில் எதிரும், புதிருமாக கருதப்பட்ட இரு தலைவர்களும் சந்தித்து பேசியது சர்வதேச அரசியல் அரங்கில் பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

5 × three =