இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பிவைத்தது அமெரிக்கா

 

கரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவில், மருத்துவமனைகளில் பிராணவாயு தட்டுப்பாடு நிலவுவதால், அமெரிக்கா முதல்கட்டமாக அனுப்பிவைத்த 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் டெல்லியை வெள்ளிக்கிழமை வந்தடைந்தன. அமெரிக்காவிலிருந்து சி 5 எம் சூப்பர் கேலக்ஸி என்ற நவீன ரக விமானத்தில் இந்த மருத்துவ உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவின் 70 ஆண்டுகால நட்பு நாடான இந்தியாவுக்கு, கரோனா காலகட்டத்தில் அதை எதிர்கொள்ள அமெரிக்க துணைநிற்கும் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவுக்கு பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ரோமானியா, லக்சம்பர்க், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்வீடன், நியூஸிலாந்து, குவைத், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் மருத்துவ உபகரணங்களை அனுப்பிவைத்தன.

Add your comment

Your email address will not be published.

twenty − six =