ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் சொல்லி கொள்ளாமல் வெளியேறிய அமெரிக்க ராணுவம்

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகள் அவசர அவசரமாக அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய ராணுவ விமானப் படை தளமான பாக்ரமில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், எவ்வித முன் அறிவிப்புமின்றி வெளியேறியதாக ஆப்கன் படைத் தளபதி அசதுல்லா கோஹிஸ்தானி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பக்ராம் விமானப் படை தளம் அருகே அமைந்துள்ள ஜெயிலில் 5 ஆயிரம் தலிபான்கள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அனைவரும் சிறையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

இதனிடையே, ஆப்கன் கிராமப்புறங்களில் தலிபான்களின் நடமாட்டம் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிப்பது, அந்நாட்டின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறுவதை ஒருவகையில் பார்த்தால், இந்தியாவுக்கும் கெடுதல் என்றே கருத தோன்றுகிறது. ஏனெனில், அந்நாடு தனது எல்லையின் ஒரு பகுதியை சீனாவுடன் பகிர்ந்துகொள்கிறது. ஏற்கனவே இந்தியாவுடன், சீனா எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானிலும் அந்நாடு ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதை பிரச்சினையை இந்தியா தீவிரமாக கருத வேண்டியது அவசியம் என சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

7 + 4 =