அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் உயிருக்கே உலை வைக்கலாம் என எச்சரிக்கை

அமெரிக்காவில் பசிபிக் வட மேற்கு கடற்கரை மாகாணங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிலும் போர்ட்லாண்டில் கடந்த சனிக்கிழமை அதிகபட்சமாக 108 ஃபாரன்ஹீட் வெப்பநிலை (42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. வாஷிங்டன் மற்றும் ஓரிகான் மாகாணத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஓரிகானில் மலட்நோமா நகரில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் வெப்பநிலை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வரையிலும் இந்த வெப்பநிலை அங்கு நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Add your comment

Your email address will not be published.

20 − eleven =