அமெரிக்காவில் ராணுவ ஆடை தரித்த 9 பேர் கைது

பயங்கரவாதிகளா? என விசாரணை

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாண தலைநகர் பாஸ்டன் அருகே உள்ள வேக்”ஃ”பீல்ட் நகரில் காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று ரோந்து பணியில் இருந்தார். அப்போது, அவரை கண்டதும் இரு வாகனங்களில் வந்த 9 பேர், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் ஓடி ஒளிந்தனர். அந்த நபர்கள் ராணுவ வீரர்களை போல் சீருடை அணிந்திருந்ததுடன், கையில் ஆயுதங்களும் வைத்திருந்தனர். இதனால், அமெரிக்க காவல் துறையினர் வனப்பகுதியில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.

அமெரிக்க சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிற நிலையில், அதை முறியடிக்கும் விதத்தில் பயங்கரவாதிகள் ஊருவியுள்ளனரா என்ற கோணத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Add your comment

Your email address will not be published.

1 × 5 =