அமெரிக்காவில் முடங்கிய ஐ.டி. நிறுவனங்கள்

 

அமெரிக்காவில் “ஃ”புளோரிடா மாகாணத்தை மையமாக கொண்டு செயல்படும் கேசயா என்ற பிரபல ஐ.டி. நிறுவனத்தின் இணையதளத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி, அதை ஸ்தம்பிக்க வைத்தனர். இதேபோல், 200க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்களின் மீது இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், அந்நிறுவனங்களின் செயல்பாடு அடியோடு முடங்கியது. குறிப்பாக கேசயா நிறுவனத்துக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

ரஷ்யாவை மையமாக கொண்டு செயல்படும் ஆர் எவில் என்ற நிறுவனமே இந்த செயலில் ஈடுபட்டு, அமெரிக்க பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க முயல்வதாக ஐ.டி. நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

Add your comment

Your email address will not be published.

8 + 17 =