வாக்குறுதியைத் திரும்பப் பெற்ற லிஸ் டிரஸ்

வாக்குறுதியைத் திரும்பப் பெற்ற லிஸ் டிரஸ்

மூத்த அதிகாரிகள் அதிர்ச்சி

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் லிஸ் டிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில், தான் மட்டும் பிரிட்டன் பிரதமரானால் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவேன் என அவர் சமீபத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் மூத்த அதிகாரிகள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனது வாக்குறுதியை லிஸ் டிரஸ் திரும்பப் பெற்றுள்ளார். அதாவது குடிமைப்பணி அதிகாரிகளின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய தேசிய அளவில் செயல்படும் ஊதிய குழுவை கலைத்துவிட்டு, பிராந்திய அளவில் ஊதிய குழுவை ஏற்படுத்துவேன் லிஸ் டிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனால் பிரிட்டனில் பல்வேறு பிராந்தியங்களில் பணிபுரியும் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் பறிபோக வாய்ப்பிருப்பதாகவும், அவர்களுக்கிடையே ஊதியத்தில் ஏற்ற இறக்கம் நிலவ சாத்தியக்கூறுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

பிரதமர் வேட்பாளர் லிஸ் டிரசின் இந்த திடீர் மாற்றம் குடிமைப்பணி அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அளிப்பது குறித்து பிரிட்டன் மூத்த அதிகாரிகள் தங்களுக்கிடையே தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.