ஜி7 மாநாட்டில் பயன்படுத்தப்படாத உணவு பொருள்கள் தானம்

இங்கிலாந்தின் கார்ன்வால் கடற்கரையில் ஜி7 மாநாடு சமீபத்தில் 3 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட உணவு பொருள்களில், ஏராளமானவை பயன்படுத்தப்படாமல், உணவு வங்கிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுவிட்டன.

அந்த வகையில் கேம்பன், பூல், ரெட்ரூத் உணவு வங்கிகளுக்கு டன் கணக்கில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு, அவை ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இருக்கின்றன. எஞ்சிய உணவு பொருள்கள் கேம்பன் தலைமை அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

five × four =